முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்தை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அனுர தரப்பு

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa), தமது கட்சி தலைவரும் ஜனாதிபதி
வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவுடனான (Anura Kumara Dissanayake) பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பகிரங்க
விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti), ஊடக சந்திப்பு ஒன்றின்றி கருத்து தெரிவிக்கும்போது, போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார (Nalin Bandara) மற்றும் ஹர்ஷ. டி. சில்வா (
Harsha de Silva) ஆகியோர் விடுத்த பகிரங்க விவாத சவாலை ஏற்றுக்கொள்ள தமது கட்சி தயாராக
இருப்பதாகவும், அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறும் ஹந்துன்நெத்தி கோரியுள்ளார்.

பின்லாந்தினை உலுக்கிய தூப்பாக்கிச் சூடு!...பாடசாலை மாணவன் பலி

பின்லாந்தினை உலுக்கிய தூப்பாக்கிச் சூடு!…பாடசாலை மாணவன் பலி

பொருளாதாரக் கொள்கைகள் 

மேலும் அவர், “தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து
விவாதம் நடத்துவது நல்லதொரு நகர்வாகும்.

npp-accepts-sjb-s-debate-challenge-

அதன் மூலம், அவர்களின் கொள்கைகளை
மக்கள் அறிந்து கொள்ள முடியும். என்றும் தெரிவித்த, ஹந்துன்நெத்தி, சஜித்
பிரேமதாசவுடன் விவாதத்திற்கு அனுரகுமார திஸாநாயக்க தயாராகவே இருக்கின்றார்.

பொது மக்கள் ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைகளை ஓரளவுக்கு பொறுப்புணர்வோடு
நேரடியாக அறிந்து கொள்வது முக்கியம். கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா மற்றும்
எரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) ஆகியோருடன் விவாதிப்பது அர்த்தமற்றது.

இந்தநிலையில், சஜித் பிரேமதாச விவாதத்திற்கு விரும்பாவிட்டால், அதனை எழுத்து
மூலம் அறிவிக்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார். 

மைத்திரியின் பாதுகாப்பில் அமெரிக்க புலனாய்வு துறை இரகசிய நகர்வு

மைத்திரியின் பாதுகாப்பில் அமெரிக்க புலனாய்வு துறை இரகசிய நகர்வு

திருகோணமலை தமிழர்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் வேண்டும் : மனோ வலியுறுத்து

திருகோணமலை தமிழர்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் வேண்டும் : மனோ வலியுறுத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்