தேசிய மக்கள் சக்தியினருக்கும்(NPP) தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில்(Jaffna) நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க(Anura kumara Dissanayake) தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா(Mavai Senathirajah) தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(11) காலை இச் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி
சூடுபிடிக்கும் அரசியல் களம்
இதன் போது பிரதானமாக அதிபர் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை திடீரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் (10)தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக் கட்சியினரை சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ரணிலை ஆதரிப்பதற்காக புதிய அரசியல் கூட்டணி
யாழில் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |