தேசிய மக்கள் சக்தி தரப்பினால் பெண்களின் திருமண வயது 18ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டமையானது பெண்களின் பாதுகாப்புக்காகவே என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக உள்ள சரோஜா போல்ராஜ் 2019ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பெண்களின் திருமண வயதை 18ஆக அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார். எனினும், ஏனைய அரசியல் கட்சிகள் இதனை தேசிய மக்கள் சக்திக்கு இனவாத சாயம் பூச பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் சலசலப்பொன்று ஏற்பட்டிருந்தது.
அத்துடன், கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அதற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,