Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதிர்கால திட்டம்: அனுர எடுத்துரைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதிர்கால திட்டம்: அனுர எடுத்துரைப்பு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான திட்டங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறைந்த விலை

குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் கீழ் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் அகற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இழந்த வரி வருவாயை ஈட்டும் வகையில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டு அது தொடர்பான வரித் திட்டம் தயாரிக்கப்படும் என அனுர தெரிவித்துள்ளார்.

மேலும், அனுரகுமார திசாநாயக்க இன்று (17) முற்பகல் வெள்ளவத்தை காலிவீதி மஹா சங்க சபை செயலாளர் அலுவலகத்தில் இலங்கை அமரபுர மஹாக சங்க சபையின் உபத்தலைவர் அதிசங்கைக்குரிய மாகல்லே நாஹித மஹா நாயக்க தேரரை சந்தித்துள்ளார்.

இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.

இந்த தருணத்தில் இலங்கை மகா சங்க சபையின் உதவி பதிவாளர் கலைமுதுமாணி சங்கைக்குரிய அஹங்கம மைத்திரிமூர்த்தி நாயக்க தேரர், அமரபுர சத்தம்மயுத்திக மாத்தறை தரப்பின் தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி சங்கைக்குரிய பெரகம விமலபுத்தி நாயக்க தேரர், இரத்மலான ஸ்ரீ போதிருக்காராமாதிபதி கலைமுதுமாணி சங்கைக்குரிய இரத்மலானை ராஹுல நாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இணைந்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துன்நெத்தி இதன்போது இணைந்துகொண்டிருந்தார். 

NO COMMENTS

Exit mobile version