நாட்டில் புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொத்மலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அரிசி மற்றும் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
நாடு முழுவதிலும் விவசாய நடவடிக்கைகளுக்கு குரங்குகள் சேதம் விளைவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குரங்குகள் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற போதிலும் விவசாயிகளின் கோணத்தில் பார்க்கும் போது அது ஒர் சரியான தீர்மானமாகவே காணப்படுகின்றது.
எவ்வாறெனினும், இலங்கை பௌத்த நாடு என்பதனால் அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு போதியளவு அனுபவமுடையவர்கள் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் சில சவால்களை எதிர்நோக்கி வருவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.