Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் முடிவு இன்று …! அநுர அரசை எச்சரிக்கும் கம்மன்பில

அரசாங்கத்தின் முடிவு இன்று …! அநுர அரசை எச்சரிக்கும் கம்மன்பில

0

இன்று வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பிப்பதை குறிக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்றைய தினம் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நுகேகொடை பேரணியில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, சிறீ லங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளன.

எதிர்க்கட்சியின் பிரசார பேரணி

எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் முதல் எதிர்ப்பு பேரணிக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு, மக்களுடன் இணைந்து பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எங்களுக்கு அறிவித்துள்ளனர்.

பங்கேற்காத சில கட்சிகளும் இந்தப் பேரணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளன.
அவர்கள் அனைவரின் சகோதரத்துவத்துக்கும் நாங்கள் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம்.

எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்யும் போது எங்களுக்கு இருந்த மிகப்பெரிய சவால் என்னவென்றால் இந்தப் பேரணிக்கு எப்படி விளம்பரம் கொடுப்பது என்பது தான்.

ஆனால், அரசாங்கத்தால் இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சியின் பிரசார பேரணி ஒன்றுக்கு கிடைத்ததில் அதிகபட்ச விளம்பரத்தை தற்போது 21ஆம் திகதி நுகேகொடை நகரில் நடைபெறும் பேரணிக்கு வழங்கப்பட்டுள்ளது- என்றார்         

NO COMMENTS

Exit mobile version