புதிய இணைப்பு
நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (21) 38 பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் ஒன்றில், எபோஸலி, மலைமகள், ஆக்ரஓயா,
பின்ஓயா மற்றும் கணேசா ஆகிய பாடசாலைகள்
கோட்டம் மூன்றில் – புலூம்பீல்ட், லொனெக் மற்றும் மொக்கா வின்னர்ஸ் கல்லூரி
ஆகிய பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நுவரெலியா கல்வி வலயத்தில், ஹோல்புறுக் தமிழ் மகாவித்தியாலயம்
உட்பட மேலும் நான்கு பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின்
பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் கல்வி
அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பெற்றோர்களும்,மாணவர்களும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (21) 38 பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சபரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதமாக 38 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக என அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் அந்தந்த மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள 13 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம்
நுவரெலியா வலயத்தில் உள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்தில் உள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வலயக்கல்வி அலுவலகங்களின் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கும் முழு அதிகாரம் அந்தந்த மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள மற்ற பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் வலயக்கல்வி அலுவலகங்களின் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/nuwara-eliya-and-hatton-zone-schools-closed-1789964785
