Home இலங்கை சமூகம் நுவரெலியா – ராகலை தனியார் பேருந்து பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

நுவரெலியா – ராகலை தனியார் பேருந்து பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

0

நுவரெலியா – ராகலை பிரதான
வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் திடீர்
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா ராகலை தனியார் பேருந்து சாரதிக்கும் நுவரெலியா – கந்தப்பளை தனியார் பேருந்து சாரதிகளுக்குமிடையே நேற்று (13) மாலை கந்தப்பளை மற்றும் நுவரெலியா பிரதான
பேருந்து தரிப்பிடத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் தமக்கு உரிய தீர்வு வேண்டும் எனக்கோரி குறித்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து ஊழியர்கள் கோரிக்கை

குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட
விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளது.

இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என நுவரெலியா – ராகலை பிரதான வீதியில்
சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  

குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒன்றினையும் நுவரெலியா – ராகலை சாலையில் இயங்கும் பேருந்து சாரதிகள் மற்றும்
நடத்துனர்கள் செய்துள்ளனர்.

அதேவேளை, திடீரென இன்றையதினம்(14.08.2025) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பொதுமக்கள்
பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
 

NO COMMENTS

Exit mobile version