Home இலங்கை குற்றம் ஜனாதிபதி வேட்பாளரிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது

ஜனாதிபதி வேட்பாளரிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது

0

Courtesy: Sivaa Mayuri

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இலஞ்சம் கோரும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்கவிடமிருந்து 30 மில்லியன் ரூபாயை லஞ்சமாக பெற்றபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை

ஜனக ரத்நாயக்கவிற்கு கட்சியில் இருந்து வேட்புமனு வழங்குவதற்காக இலஞ்சம் கோரும் போதே பொரளையில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர்கள்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி, ஊழல்களுக்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் கமந்த துசாரவின் முறைப்பாட்டையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version