2025(2026) சாதாரணதர பரீட்சை முடிவுகளின் மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று (25) முதல் ஜூலை 08 வரை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும், வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பரீட்சைகள் திணைக்கள இணையம் வழிமூலம் விண்ணப்பிப்பு
விண்ணப்பதாரர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.doenets.lk-க்குச் சென்று, “எங்கள் சேவைகள்” என்பதன் கீழ் உள்ள “பரீட்சை தகவல் மையம்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள், கணினியில் உள்நுழைய தங்களது சுட்டிலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும், அதே சமயம் புதிய பயனர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
விண்ணப்பத்தைச் சரியாகப் பூர்த்தி செய்வதற்கு, விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன்பு தொழில்நுட்ப வழிமுறைகள், பொது வழிமுறைகளைப் படிப்பது மற்றும் அறிவுறுத்தல் காணொளியைப் பார்ப்பது அவசியம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்துகிறது.
மீள்திருத்த கட்டணம்
ஒரு பாடத்திற்கான மீள்திருத்த கட்டணம் ரூ. 200 ஆகும். இதனை கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்அல்லது தபால் நிலையங்கள் மூலம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய பிறகு, விண்ணப்பப் படிவத்தை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இதுகுறித்து ஒரு குறுஞ்செய்தி (SMS) அறிவிப்பு அனுப்பப்படும்.
நீங்கள் ஒருமுறை மட்டுமே ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். கட்டணம் செலுத்திய பிறகு, அது திரும்பத் தரப்படாது என அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, 1911 அல்லது 0112 என்ற ஹொட்லைன் எண்ணை அழைக்கவும். 785 231 உள்ளிட்ட அதிகாரபூர்வ தொலைபேசி எண்கள் மூலமாகவும் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
Source: https://ibctamil.com/article/ol-re-examination-to-be-called-from-today-1782399512
