Home இலங்கை சமூகம் கடும் மன உளைச்சல் : யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்த மூதாட்டி

கடும் மன உளைச்சல் : யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்த மூதாட்டி

0

   யாழ்ப்பாணத்தில்(jaffna), மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் நேற்றிரவு (25) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார்.

சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மங்களநாயகி (வயது 80) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பிள்ளைகள் வேலைக்கு செல்வதால் தனிமையில் தவிப்பு

குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைகளுக்கு செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் நேற்றிரவு (25) வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத்தோட்டத்திற்கு சென்று, மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றி, தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version