முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

116ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பெண்!

116 வயதைத் தொட்டுள்ள உலகின் இரண்டாவது வயதான பெண்ணாக வலம்வரும் எடி சிசரேலியின் 116ஆவது பிறந்தநாள் அண்மையில் கொட்டும் பனிக்கு மத்தியிலும் கலிஃபோர்னியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1908ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதி பிறந்த எடி சிசரேலி, திருமணமாகி, குழந்தை பிறந்து, பேரக்குழந்தைகளும் பிறந்து இறந்த பிறகும் இன்று வரை சந்தோஷமாக உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய நகரமான வில்டிஸில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வயதான பெண்மணியான எடி சிசரேலியின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவதும் ஒரு முக்கியமான விடயமாகும்.

நிகழ்நிலை காப்புச் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது கைது : டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

நிகழ்நிலை காப்புச் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது கைது : டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

கௌரவப் பரிசு

இந்த ஆண்டும் (2024) கூட அவரது 116ஆவது பிறந்தநாளை நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர், உள்ளூர் அரங்குகளில் அல்லது முதியோர் மையங்களில் வெகு விமர்சையாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவதில் பெயர் பெற்ற எடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீப ஆண்டுகளாக நகர மக்கள் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக மாறியுள்ளது.

116ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பெண்! | Oldest Woman Celebrating Her 116Th Birthday

இந்த ஆண்டு அவரது 116ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஊர்வலமும் இடம்பெற்றது, கடும் பனிப்பொழிவிற்கு இடையிலும் இந்த வயதில் எடி ஊர்வலத்தில் கலந்துகொண்டார், இவருக்கு மரியாதை செய்யும் விதமாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கௌரவப் பரிசையம் வழங்கி கெரவித்துள்ளனர்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

பிறந்தநாள் விழா

ஒருபக்கம் டிமென்ஷியா பிரச்சனை, இன்னொரு பக்கம் தன்னுடைய உறவினர்கள் அனைவரும் இறந்து போன நிலையிலும் எடியின் மனது இன்றும் இளமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது.

116ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பெண்! | Oldest Woman Celebrating Her 116Th Birthday

2012ஆம் ஆண்டு தனக்கு 104 வயதாக இருக்கும் போது, தன்னோடு சேர்ந்து நடனமாட துணை ஒன்று வேண்டுமென உள்ளூர் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்குமளவிற்கு குறும்புத்தனமும் கொண்டவராக விளங்கி வருகிறார்.

எடியின் பிறந்தநாள் விழாவை அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சந்தோஷமாக கொண்டாடி வரும் வேளையில், இத்தனை ஆண்டுகள் வாழ்வதற்கு ஏதாவது விசேஷ திறமை வேண்டுமா என எடியிடம் கேட்டால், அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில், கொஞ்சம் சிவப்பு வைன் மற்றும் யாருடைய வம்புக்கும் போகாமல் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
 

சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு

சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்