Home இலங்கை கல்வி மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை

மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை

0

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில்
பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் நயோலின் அபிறியானா
அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர், யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம்
இடத்தினை பெற்றுள்ளார். 

தொடர் சாதனைகள் 

அதேவேளை, மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட
போட்டியில் இரண்டாம் இடத்தினை தனதாக்கியுள்ளார். 

மேலும், இவர் 2018ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில பாராயணம் (English Resitation) போட்டியில்
முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/olympiad-competition-mannar-women-school-1st-place-1729026805

NO COMMENTS

Exit mobile version