Home இலங்கை சமூகம் ஓமானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

ஓமானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

0

 ஓமானில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வீசா காலம் பூர்த்தியானதன் பின்னரும் அந்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

உரிய கடவுச் சீட்டு இல்லாத அல்லது வீசா காலம் நிறைவடைந்தவர்கள் இவ்வாறு பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள் தற்காலிக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தில் ஓமானிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் வீசா காலம் நிறைவடைந்ததன் பின்னர் தங்கியிருந்தமைக்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டியதில்லை என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version