Home இலங்கை சமூகம் தென்னிலங்கையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தென்னிலங்கையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

0

கல்கிஸ்ஸ (Galkissa) – படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடளுடன் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ  காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 6.800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

26 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் (Operation Yukthiya) போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கைதுசெய்யப்பட்டவர்களில் 24  ஆண்களும் 04 பெண்களும் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/one-arrested-with-heroin-1727593074

NO COMMENTS

Exit mobile version