Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்காக ஆரம்பமாகும் விசேட வேலைத்திட்டம்

விவசாயிகளுக்காக ஆரம்பமாகும் விசேட வேலைத்திட்டம்

0

நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள “ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்” தேசிய திட்டம் இன்று ஆரம்பமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிரிடப்படாத அனைத்து வயல்களையும் விவசாய நிலங்களையும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக குறித்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனடிப்படையில் இன்று (15) பொல்கஹவெல – ஹொதெல்லவில் உள்ள ஜயசுந்தராராம விகாரைக்கு முன்பாக தொடங்குகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்

இந்த ஆரம்ப நிகழ்வு விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தலைமையில் நடைபெறுகின்றது.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் 566 கமநல சேவைப் பகுதிகளில் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உணவு கையிருப்புகளைப் பராமரித்தல், உள்நாட்டு உணவு நுகர்வு மற்றும் விவசாய பயிர் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு 23ஆம் திகதி வரை தெளிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version