Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் இன்றிரவு கோரவிபத்து : ஒருவர் பலி இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்றிரவு கோரவிபத்து : ஒருவர் பலி இருவர் படுகாயம்

0

கிளிநொச்சி(kilinochchi) ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இன்று(04-09-2024) இரவு வேகக் கட்டுப்பட்டையிழந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிக வேகத்தில் சென்ற நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சகோதரர்களில் ஒருவர் உயிரிழப்பு

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணை

 இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது D08 உருத்திரபுரம் கிளிநொச்சி யை சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் (வயது – 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/one-killed-and-two-injured-accident-in-kilinochchi-1725468532

NO COMMENTS

Exit mobile version