Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

0

தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (10.06.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்க தகவலின்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்றின் விலை 5000 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்க பவுணொன்று 347800 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமின் விலை நிலவரம்

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,475 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/one-pawn-gold-rate-in-sri-lanka-1781072601

NO COMMENTS

Exit mobile version