முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோப் குழுவிலிருந்து விலகியவர்கள் ஐந்து பேர் மாத்திரமே..! எழுத்து மூலமாக அறிவிக்காத சாணக்கியன்

கோப் (COPE) குழுவில் இருந்து இதுவரை ஐந்து பேர் மாத்திரமே உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

தாம் பதவி விலகியுள்ளதாக குறித்த ஐவர் மாத்திரமே எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி டிலான் பெரேரா, துமிந்த திசாநாயக்க, எரான் விக்ரமரத்ன, மரிக்கார் மற்றும் சரித ஹேரத் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளதாக அந்த பேச்சாளர்  கூறியுள்ளார்.

அராஜகம் செய்யும் போலிப் பிக்குகள்! விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி

அராஜகம் செய்யும் போலிப் பிக்குகள்! விசாரணைகளை ஆரம்பித்தது சி.ஐ.டி

சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்றம் 

இவர்களைத் தவிர, அனுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இராசமாணிக்கம் சாணக்கியன், தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட, ஹேஷா விதானகே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் கோப் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

கோப் குழுவிலிருந்து விலகியவர்கள் ஐந்து பேர் மாத்திரமே..! எழுத்து மூலமாக அறிவிக்காத சாணக்கியன் | Only 5 Members Of Cope Have Officially Resigned

எனினும் அவர்கள் இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துமூலம் தெரியப்படுத்தும் வரையில் அவர்களின் பதவி விலகல் செல்லுபடியாகாது என நாடாளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான நற்செய்தி

குறைந்தபட்ச சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்