நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட மக்களின் நன்மை கருதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக
நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் காரியாலயமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காரியாலமானது இன்று(22.04.2024) நுவரெலியா இலக்கம் 95/26 A, லேடி மெக்லம் வீதி ,ஹாவஎலிய என்ற விலாசத்திலுள்ள பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால்(Tiran Alles) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தரிவிக்கப்படுகிறது.
இரண்டு தமிழர்கள் உட்பட ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
ஒருநாள் சேவை
மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் விதத்தில் நுவரெலியாவில் குறித்த அலுவலகம்
திறக்கப்பட்டதோடு, சாதாரண சேவையூடாக தேசிய அடையான அட்டைகளை பெறுவதற்கான
அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெகு விரைவில் ஒருநாள் சேவை
ஆரம்பிக்கப்படுமெனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி
இராதாகிருஸ்ணன், சீ.பி.ரட்ணாயக்க, மருதுபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அரச திணைக்கள
அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட மக்கள், அடையாள அட்டையை பெற்றுக்
கொள்வதற்காக கொழும்புக்கு சென்று வர வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் தற்பொழுது
இந்த மாவட்ட காரியாலயம் திறக்கப்படுவதன் மூலமாக அந்த பிரச்சினை தீர்த்து
வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி- செ.திவாகரன்
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் அறவிடப்படும் பணம்: வெளியான அதிர்ச்சி தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் சாயம் பூச முயலும் கடும்போக்காளர்கள்: பிள்ளையான் விசனம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |