Home இலங்கை சமூகம் அனலைதீவில் அனலை அன்னை உற்பத்தி நிலைய கட்டட திறப்பு விழா

அனலைதீவில் அனலை அன்னை உற்பத்தி நிலைய கட்டட திறப்பு விழா

0

அனலைதீவில் அனலை அன்னை உற்பத்தி நிலைய கட்டட திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

இந்தநிகழ்வு நேற்று(17) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பங்கேற்புடன் இடம்பெற்றது.

அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு உற்பத்தி பொருட்களை
உற்பத்தி செய்வதற்காக இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா

தீவகப் பகுதிகளின் வாழ்வாதாரத்திற்கு இன்னல் படும் மக்களிற்கு இந்தக் கட்டடம்
பெரிதும் உதவியாக இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் குறித்தொதுக்கப்பட்ட 10
இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஊர்காவற்றுறை பிரதேச
சபையின் தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா, ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின்
பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம், ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி
சங்கத்தின் நிர்வாகத்தினர் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version