Home இலங்கை சமூகம் கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

0

Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்ட கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வான் கதவுகள் நேற்று(17) பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் மழையினால் கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றது.

நீர் கொள்ளளவு

நேற்று காலை 8.00 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 94,560 ஏக்கர் அடியாக (83%) பதிவாகியுள்ளது.

இதனையடுத்தே, வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version