சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (13) முதல் அனைத்து பிராந்திய பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தடுப்புக்காவல்
இந்த நடவடிக்கையில் தேவைக்கேற்ப விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் மோப்ப நாய் பிரிவின் உதவியையும் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருட்களைக் கடத்துதல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகளையும் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.