கிராமபுரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை பாரபட்சம் இன்றி ஒதுக்க வேண்டியது கட்டாயம் என அம்பாறை (Ampara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் (Kavindran Kodishwaean) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் அதி கஷ்டகரமான பாடசாலைகளுக்கு ஒதுக்கப்ட்ட நிதியானது மிகக்குறைவாக காணப்பட்டது.
தற்போது அனரத்தத்தின் காரணமாகவும் சில பாடசாலைகள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/LQu8uYGn0qA?start=124