Home இலங்கை சமூகம் யானைகளை அருகினில் பார்க்க வேண்டுமா! கன்னியா குப்பை கிடங்கிற்கு வாருங்கள்

யானைகளை அருகினில் பார்க்க வேண்டுமா! கன்னியா குப்பை கிடங்கிற்கு வாருங்கள்

0

திருகோணமலை மாவட்டத்தின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட
கன்னியா பகுதியில் உள்ள தனி நபர் ஒருவரால் நடாத்தப்படும் கழிவுகளை சேகரிக்கும்
நிலையத்தின் காரணமாக தாம் மிகுந்த அசோகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்ததுள்ளனர்.

மழை காலங்களில் குறித்த பகுதியில் குப்பைகளை கொட்ட வரும் பிரதேசசபை மற்றும்
மாநகரசபை வாகனங்கள் குப்பைகள் சேகரிக்கும்
பகுதியின் வாயிலுக்கு அருகாமையில் அதனை கொட்டுவதனால் அவற்றை உண்பதற்கு வரும்
காட்டுயானைகளால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதி
வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த குப்பை கிடங்கிலிருந்து வெளியேறும் நீரானது வாய்க்காலின் ஊடாக
அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் சேர்வதனால் நிலத்தடி நீரும்
பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்று மாசு 

மழை காலங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், வெயில் காலங்களில் அங்கு தீ வைப்பதன் காரணமாக அங்கு காற்று அசுத்தமாவதாகவும் தெரிவித்தனர். மேலும் இலையான் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவ்விடத்தில் குப்பைகளை மீழ் சுழற்சி
செய்யும் நிலையத்தின் உரிமையாளரிடம் கேட்ட போது, அரச தரப்பிடமிருந்து
அப்பகுதியில் நிலையத்தினை நடத்திச் செல்வதற்கான காணி அனுமதிப்பத்திரம்
தமக்கு இன்னமும் வழங்கப்படாமல் இளுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் அதன்
காரணமாக தம்மால் இந்த பகுதியில் எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு, 2015ம் ஆண்டிலிருந்து இதற்கான அனுமதிகளை எடுக்க முயற்சி எடுத்து வருவதாகவும்
இற்றைவரைக்கும் அது வழங்கப்படாமையால் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுக்க
நேரிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

NO COMMENTS

Exit mobile version