முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டு மக்களுக்கு சமாதானம் நிறைந்த நல்வாழ்வு வேண்டும்!..பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

நாட்டின் கடன் நெருக்கடிகள் நீங்கி மக்களுக்கு சுபிட்சமும் சமாதானமும் நிறைந்த நல்வாழ்வை உயிர்த்த கிறிஸ்து வழங்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு திகத்தினையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில்,

“மானிட குலத்தை மீட்பதற்காக மனித உருவெடுத்து வந்த இறைமகன் கிறிஸ்து, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இந்த உன்னதமான நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினமாக கொண்டாடுகின்றனர்.

ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை..! மன்னார் மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ள செய்தி

ஆட்சி முறைமையில் பாரிய மாற்றம் தேவை..! மன்னார் மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ள செய்தி

உயிர்ப்பு விழா

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவை சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்தவரானார் என்ற திருவிவிலிய வாக்கியத்திற்கு அமைய, அடிமைத்தன ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மீட்பு, சமாதானம், சமத்துவம், அன்பு, நட்புறவு என அனைத்தையும் இந்த உலகிற்கு பரிசளிப்பதற்காக அவமானத்தின் சின்னமாக கருதப்பட்ட சிலுவை சாவை கிறிஸ்து ஏற்றார்.

~/p-s-m-charles-easter-wish-1711862861

ஆனாலும் இறந்த கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து சாவின் ஆதிக்கத்திற்கு அந்தம் கொடுத்தார்.

இவ்வாறான மகத்துவம் நிறைந்த நன்னாளில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

உயிர்ப்பு விழாவுக்கான தயார்படுத்தலான தவக்காலத்தின் 40 நாட்களும், கிறிஸ்தவ மக்கள் ஒறுத்தல் முயற்சிகளிலும், நற்காரியங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல்

மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள இந்நாட்டை, பிரஜைகளாகிய நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் மீட்டெடுத்துவரும் மகிழ்ச்சிகரமான வேளையிலேயே இந்த ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறோம்.

~/p-s-m-charles-easter-wish-1711862861

நாட்டின் கடன் நெருக்கடிகள் நீங்கி மக்களுக்கு சுபிட்சமும் சமாதானமும் நிறைந்த நல்வாழ்வை உயிர்த்த கிறிஸ்து வழங்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களையும் இந்த வேளையில் நினைவு கூறுகின்றேன். அவர்களின் பிரிவின் நிமித்தம் வாடுவோருக்கும் உயிர்த்த கிறிஸ்துவின் தேற்றுகை கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

அனைவர் மனங்களிலும் அமைதியும், மகிழ்வும் பெறுக இத்தருணத்தில் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்வடைகின்றேன். என தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!..ரணில் உறுதி

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!..ரணில் உறுதி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - இரா.சம்பந்தன் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் – இரா.சம்பந்தன் அதிரடி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்