Home இலங்கை குற்றம் தங்காலையில் நாய்களுக்கும் ஐஸ்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள்!

தங்காலையில் நாய்களுக்கும் ஐஸ்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள்!

0

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான நிலையில் செயற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய மூன்று நாய்கள் ஒரே இடத்தில் சுற்றும் காட்சியை கண்டு பரிசோதனை செய்ததில் குறித்த நாய்கள் ஐஸ் போதை கலந்த நீரை பருகியதால் இவ்வாறு செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் வழமையாக சுற்றித்திரியும் நாய்கள் நேற்று அப்பகுதிகளில் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் 

தெற்கு கடலில் மிதந்த நிலையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய 51 பொதிகளை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை (14) கைப்பற்றி தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version