கில்லி – படையப்பா ரீ ரிலீஸ்
கடந்த 2024ஆம் ஆண்டு விஜய்யின் கில்லி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கில்லி திரைப்படம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்மூலம் வசூல் சாதனை படைத்தது.
பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு தொகை எவ்வளவு லட்சம் தெரியுமா?
முறியடிக்க முடியாத படையப்பா
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படம் கில்லி ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரை படையப்பா படம் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படையப்பா படத்தால் கில்லி வசூலை முறியடிக்க முடியவில்லை.
