Home முக்கியச் செய்திகள் கிழக்கு மாகாணத்தில் சுற்றித் திரியும் வெள்ளை யானை ஜோடி : பார்க்க படையெடுக்கும் சுற்றுலாதாரிகள்

கிழக்கு மாகாணத்தில் சுற்றித் திரியும் வெள்ளை யானை ஜோடி : பார்க்க படையெடுக்கும் சுற்றுலாதாரிகள்

0

இலங்கையின்(sri lanka) கிழக்கு மாகாணத்தில்(eastern province) சுற்றித் திரியும் அபூர்வமான வெள்ளை யானை ஜோடியொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண ‘பானம’ பகுதியில் இந்த வெள்ளை யானை ஜோடியை அடிக்கடி காணக் கிடைப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

உண்மையான காரணம்

தற்போதைய நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் குறித்த வெள்ளை யானை ஜோடியைப் பார்வையிடுவதற்காக பானமை பிரதேசத்துக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

எனினும் அப்பிரதேசத்தில் காணப்படும் சேறு மற்றும் மணல் இந்த யானைகளின் உடலில் ஒட்டியிருப்பதால் இவை வெள்ளையாக காட்சியளிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version