Home விளையாட்டு பாகிஸ்தான் ஒருநாள் அணிக்கு பதிய தலைவர் நியமனம்

பாகிஸ்தான் ஒருநாள் அணிக்கு பதிய தலைவர் நியமனம்

0

பாகிஸ்தான் ஆண்கள் ஒருநாள் அணியின் தலைவராக ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நவம்பர் 4 முதல் 8 வரை பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கு பாகிஸ்தானை இடது கை வேகப்பந்து வீச்சாளரான அப்ரிடி வழிநடத்துவார்.

ஷாஹீனின் நியமனம்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் தொடருக்கான ஷாஹீனின் நியமனம் இன்று(20) இறுதி செய்யப்பட்டது.

இதில் வெள்ளை பந்து தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version