Home உலகம் ஈரானுக்கு பாகிஸ்தானின் முழு தார்மீக ஆதரவு: பதற்றத்தில் இஸ்ரேல்

ஈரானுக்கு பாகிஸ்தானின் முழு தார்மீக ஆதரவு: பதற்றத்தில் இஸ்ரேல்

0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் (Israel) சமீபத்திய நடவடிக்கைகளால் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில்,

ஈரானுக்குத் (Iran) தங்களின் முழு தார்மீக ஆதரவை பாகிஸ்தான் (Pakistan) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, தெஹ்ரான் இதுவரை எந்தவிதமான இராணுவ உதவியையும் கோரவில்லை என்பதையும் பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த விடயத்தை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நிலைப்பாடு 

இந்தநிழலையில், ஈரான் தொடர்பான பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளிப்படையானது என அவர் வலியுருத்தியுள்ளார்.

அத்தோடு, ஈரானுக்கு நாங்கள் முழுமையான தார்மீக ஆதரவை வழங்குகிறோம் எனவும், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடைக்கலம் 

ஈரான் எல்லையில் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குமாறு தெஹ்ரானிடம் இருந்து பாகிஸ்தானுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான் இதுவரை எங்களிடம் எந்தவிதமான இராணுவ உதவியையும் கோரவில்லை என தெரிவித்த அவர், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைப்பது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்புகள் மற்றும் பிற சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் என சட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version