Home முக்கியச் செய்திகள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த வீரர் யார் தெரியுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த வீரர் யார் தெரியுமா?

0

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷஹீன் அப்ரிடி (Shaheen Afridi) படைத்துள்ளார்.

தென்னாபிரிக்க (South Africa) அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஷஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 100 விக்கெட்டுகளை கடந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்

இவர் ஒருநாள் போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 116 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிளர்.

முன்னதாக தனது 71வது டி20 போட்டியில் 100 விக்கெட் சாதனையை நிகழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப்-க்கு பிறகு பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை மிக வேகமாக எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் ஷஹீன் அப்ரிடி.

NO COMMENTS

Exit mobile version