Home உலகம் பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த வன்முறை : பயங்கரவாதிகளின் தாக்குதலில் 16 பேர் பலி!

பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த வன்முறை : பயங்கரவாதிகளின் தாக்குதலில் 16 பேர் பலி!

0

பாகிஸ்தானின் (Pakistan) பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானையொட்டிய தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்திலுள்ள இராணுவச் சாவடியில் பயங்கரவாதிகள் நேற்றையதினம் (22) அதிகாலை இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படை

இந்த தாக்குதலில் 16 இரானுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இதே மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களில் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version