Home உலகம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எச்சரிக்கை முழக்கம்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எச்சரிக்கை முழக்கம்

0

இந்தியா (India) ஆயுத சண்டையை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

துல்லியமான இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

துப்பாக்கிச்சூடு 

இதனால் பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

கடந்த மாதம் ஏழாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை நான்கு நாட்கள் ஆயுதச் சண்டை நடைபெற்றது.

பின்னர் இருநாட்டின் இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் இதனைத் தொடர்ந்து சண்டை நிறுத்தப்பட்டது.

அனைத்து நடவடிக்கை

இந்த சண்டை நிறுத்தம் இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்திருந்ததுடன் இந்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “சண்டை நிறுத்தம் இன்னும் நடைமுறையில் உள்ளதுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

புதிய சண்டை

ஆகவே, என்னுடைய கருத்தின்படி புதிய சண்டைக்கு வாய்ப்பு இல்லை எனினும், இந்தியா ஆயுத சண்டையை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் ஆனால், அதற்காக விருப்பப்படவில்லை.

பயங்கரவாதி, சிந்து நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் தொடர்பாக கூட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நாடுகிறது, சிந்து நதி நீர் பிரச்சினையை சஸ்பெண்ட் செய்ய முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version