Home உலகம் காசா விற்பனைக்கு அல்ல…! ட்ரம்ப்பின் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பலஸ்தீனர்கள்

காசா விற்பனைக்கு அல்ல…! ட்ரம்ப்பின் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பலஸ்தீனர்கள்

0

காசாவைக் (Gaza) கைப்பற்றினால், அமெரிக்க (United States)  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) சொத்துகள் சூறையாடப்படும் என்று பலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் நாங்கள் காசாவை கைப்பற்றி அதனை மத்திய கிழக்கின் சுற்றுலா தளமாக மாற்றுவோம் என்றும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

காசா விற்பனைக்கு அல்ல

காசாவைக் கைப்பற்றவிருப்பதாக ட்ரம்ப் கூறியதையடுத்து, ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்காட்லாந்து நாட்டில் ட்ரம்ப்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்குள் புகுந்த சிலர், `காசா விற்பனைக்கு அல்ல’ என்று பெயின்டால் புல்தரையில் எழுதியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மைதானத்தைச் சேதப்படுத்தி, `காசாவைக் கைப்பற்ற நினைத்தால், டிரம்ப்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ஸ்காட்லாந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.youtube.com/embed/t9B6PvCdYco

NO COMMENTS

Exit mobile version