அராலி பாலத்தடியில் இருந்து அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் 789 பேருந்து
வழித்தட வீதியில் பனைமரம் ஒன்று ஆபத்தான முறையில் காணப்படுவதால் மக்கள் உயிர்
அச்சத்தின் மத்திய போக்குவரத்தில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
வீதியோரத்தில் நிற்கும் குறித்த பனைமரத்தை இனந்தெரியாதவர்கள் அரைகுறையாக
வெட்டிய நிலையில் அந்த பனைமரம் முறிந்து விழும் அபாயத்தில் காணப்படுகின்றது.
குறித்த வீதியால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு
வருகின்ற நிலையில் ஆபத்தான நிலை அங்கு காணப்படுகின்றது.
எனவே உரிய தரப்பினர்
விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஆபத்துகளை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
