யாழ்ப்பாணம் (Jaffna) தனங்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள்
தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை
அடுத்து பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன்
தெரிவிக்கையில்,
தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக
பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
பொலிஸார் வழக்கு தாக்கல்
முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜயம்
மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை
அவதானிக்கப்பட்டதுடன், கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில்
கொண்டு வரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆரம்ப வளர்ச்சி நிலையில் உள்ள பனைகள் பல தறிக்கப்பட்டும்
அடிப்பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.
சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ்
நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்வதாக
உறுதியளித்தனர்.
சட்ட விரோத செயற்பாடுகள்
பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்து வரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில்
பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி
பொலிஸார் ஏற்க மறுத்துள்ளனர்.
இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிஸாருக்கு தொடர்பு இருப்பதாக
சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன
இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டிவரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால் 0779273042 எண்ற தொலைபேசி
இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும்” எனவும் பனை அபிவிருத்திச் சபை
தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/palmyra-palm-illegally-cut-down-in-jaffna-1734930466
