Home சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல்

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் கடந்த வாரம் தனது மனைவி மயிலின் உண்மையான வயது தெரிந்து ஏமாற்றமடைந்த கதிர், மயிலிடம் சண்டை போட்டார்.

பரபரப்பான புரோமோ

இந்த நிலையில், வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடக்கப்போவது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

இதில், தனக்கு தெரியாமல் பழனி புதிதாக ‘காந்திமதி ஸ்டோர்ஸ்’ மளிகை கடை திறந்து இருப்பதை அறியும் பாண்டியன் கடும் கோபத்துடன் வீட்டிற்கு வந்து கோமதியிடம் கத்துகிறார்.

இதன்பின் வீட்டிற்கு வரும் பழனி தனது சூழ்நிலையை எடுத்து கூறுவதற்கு முன், கோமதி தனது தம்பியை திட்டுகிறார். இதனை தொடர்ந்து கோபத்தில் இருக்கும் பாண்டியன், இனி உனக்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி விடுகிறார்.

பரபரப்பான கட்டத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

NO COMMENTS

Exit mobile version