Home சினிமா ஓவராக போகும் மயிலு.. இது எங்க போய் முடியுமோ! பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ

ஓவராக போகும் மயிலு.. இது எங்க போய் முடியுமோ! பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது புது மருமகள் தங்கமயில் செய்துவரும் விஷயங்கள் பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

படிப்பு பற்றி பொய் சொன்னது, கவரிங் நகையை தங்கம் என சொல்லி ஏமாற்றிவரும் அவர், தான் எந்த சிக்கலிலும் மாட்ட கூடாது என்பதற்காக மற்றவர்களை மாமனார் பாண்டியனிடம் போட்டு கொடுத்து வருகிறார்.

அதனால் அவருக்கு மாமனாரிடம் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.

அடுத்த வார ப்ரொமோ

தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தங்கமயில் மாமனாருக்கு மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு போவதை தடுக்க வேண்டும் என மாமியார் உடன் சேர்ந்து மற்ற இரண்டு மருமகள்களும் திட்டம் போடுகின்றனர்.

மாமியார் சென்று மயிலிடம் பேசுகிறார். உன் மாமனாருக்கு சாப்பாடு எடுத்து செல்ல வேண்டாம் என அவர் சொல்ல, அவர் உடனே போன் செய்துவிடுகிறார். அவரும் கொண்டுவரச்சொல்ல, மாமியார் கோமதிக்கு நோஸ்கட் தான் கிடைக்கிறது.

மயிலு இப்படியே செய்துகொண்டிருந்தால் வீட்டில் மற்ற பெண்களால் ஒரு பெரிய பிரச்ச்னை வரும் என எதிர்பார்க்கலாம். 

NO COMMENTS

Exit mobile version