Home விளையாட்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மற்றுமொரு இலங்கை வீரர்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மற்றுமொரு இலங்கை வீரர்

0

2024 பாரிஸ் ஒலிம்பிக் (Paris Oympics) போட்டிகளில் ஆடவருக்கான ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள இலங்கை (Sri Lanka) வீரர் அருண தர்ஷன (Aruna Darshana) தகுதி பெற்றுள்ளார்.

இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறாவது தடகள வீரர்

அந்தவகையில், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன (Darushi Karunaratne) மற்றும் நதீஷா லேகம்கே (Dilhani Legamke) ஆகியோருடன் அருண தர்ஷனவும் இணைந்து கொண்டுள்ளார்.

மேலும், அருண தர்ஷன மதிப்புமிக்க ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்குபெறும் ஆறாவது இலங்கை தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/paris-olympics-sri-lankan-athlete-aruna-darshana-1720254380

NO COMMENTS

Exit mobile version