Home இலங்கை அரசியல் திருகோணமலையில் ஆரம்பமான தேர்தல் பணிகள்

திருகோணமலையில் ஆரம்பமான தேர்தல் பணிகள்

0

திருகோணமலை (Trincomalee) தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் பணிகளும்
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க
அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சாமிந்த ஹெட்டியாரச்சி
தெரிவித்தார்.

திருகோணமலை வாக்கு எண்ணும் நிலையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.228,368

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”திருகோணமலையில் பொதுத் தேர்தலுக்காக 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்கள்

அந்த
வகையில் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 106 வாக்களிப்பு நிலையங்களும், மூதூர்
தேர்தல் தொகுதியில் 114 வாக்களிப்பு நிலையங்களும் சேருவில தேர்தல் தொகுதியில்
98 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்
பெட்டிகளை அனுப்பி வைக்கும் செயற்பாடானது இன்று காலை 7.00 மணி தொடக்கம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை
தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 3,15,925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையம்

அந்தவகையில் திருகோணமலை தேர்தல் தொகுதியில்105, 005 வாக்காளர்களும், மூதூர் தேர்தல்
தொகுதியில் 123, 363 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி காணப்படுகின்ற நிலையில் தேர்தல் பணிகளுக்காக சுமார் 4000 அரச ஊழியர்கள் பணிக்கு
அமர்த்தப்பட்டுள்ளனர்“ என தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version