முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு சோதனை : கருப்பு நிறமாகிய எதிர்கட்சி

புதிய இணைப்பு

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

உயர் பாதுகாப்பு

இதற்கிடையில், நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அன்று பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு சோதனை : கருப்பு நிறமாகிய எதிர்கட்சி | Parliament Session Start Debate On Drugsi Issues

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறையில் இருக்கும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் அறிவித்தார்.

இதற்கிடையில், அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயற்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொடூரமான படுகொலைக்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று (23) நாடாளுமன்றத்தில் விசேட ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கருப்பு நிற உடை

இந்தப் போராட்டத்தின் அடையாள நடவடிக்கையாக, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கருப்பு நிற உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு சோதனை : கருப்பு நிறமாகிய எதிர்கட்சி | Parliament Session Start Debate On Drugsi Issues

இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, இந்தக் கொலை தொடர்பாக அரசாங்கத்தால் நடத்தப்படும் விசாரணை செயல்பாட்டில் தனது கட்சி சிறிதும் திருப்தி அடையவில்லை” என்று கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு 

இன்றைய (23.10.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.30 முதல் மாலை 05.30 வரை போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய அரசாங்கத்தின் ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/azOs-gCD4As

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.