Home ஏனையவை வாழ்க்கைமுறை மட்டக்களப்பில் ஒசுசல மருந்தகங்கள்.. சபையில் கேள்வி எழுப்பிய சாணக்கியன்!

மட்டக்களப்பில் ஒசுசல மருந்தகங்கள்.. சபையில் கேள்வி எழுப்பிய சாணக்கியன்!

0

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அரச ஒசுசல மருந்தக கட்டிடம் அமைக்கப்பட்டு மூடிய நிலையிலேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் இன்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பிய அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று அரச ஒசுசல மருந்தகங்கள் வேண்டும் என எம்மால் கோரப்பட்டுள்ளது. 

அதேவேளை, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அரச ஒசுசல மருந்தக கட்டிடம் அமைக்கப்பட்டு மூடிய நிலையில் உள்ளது. 

எனவே, மட்டக்களப்பில் அரச ஒசுசல மருந்தக மருந்தகங்கள் அமைக்கப்படுமாயின் இந்த களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தையும் கவனத்தில் கொள்ள முடியுமா” என கேள்வி எழுப்பியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version