Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்.பிக்கு வலுக்கும் எதிர்ப்பு :ஆணிகளை புடுங்க வேண்டாமென எச்சரிக்கை

அர்ச்சுனா எம்.பிக்கு வலுக்கும் எதிர்ப்பு :ஆணிகளை புடுங்க வேண்டாமென எச்சரிக்கை

0

தமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை(ramanathan archchuna) கேட்டுக்கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு(batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம்,(Mohamed Sali Nazeem) தேவையான ஆணிகளை புடுங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாடளுமன்றத்தில் திங்கட்கிழமை(10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் இவ்வாறு கூறினார்.

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேவையான ஆணிகளை புடுங்குங்கள், தேவையில்லாத ஆணிகளை புடுங்க வேண்டாம் என்றும் அர்ச்சுனா எம்.பியிடம் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம்கள் தொடர்பாக நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி தெரிவித்த விடயம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version