முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்

அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடன உரையை முன்வைத்துக்கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சி தலைவரும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர்
நேற்றையதினம் (07) அதிபரின் கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறினர்.

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

கொள்கைப் பிரகடன உரை

இவர்கள் வெளியேறும் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்ததுடன் பிரதியமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவின் உரையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் | Parliment Speech Ranil Sajith Left The Assembly

வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என கூறினார்.

இதன்போது, சாமர சம்பத் தசநாயக்கவை அமைதியாக இருக்குமாறு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றம் இன்று(8) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்தார் விக்னேஸ்வரன்

ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்தார் விக்னேஸ்வரன்

அதிபர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

அதிபர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்