Home இலங்கை சமூகம் லெபனான் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

லெபனான் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட அறிவிப்பு

0

தொழில் நிமித்தம் லெபனானுக்கு(Lebanon) செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

போர் பதற்றம்

அத்துடன், அந்த நாட்டில் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்களை பதிவு செய்யப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லெபனானுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

இதேவேளை, சுமார் 7400 இலங்கையர்கள் தற்போது லெபனானில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/pauses-registration-srilankan-workers-to-lebanon-1730538056

NO COMMENTS

Exit mobile version