பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில், திருகோணமலை மூதூரில் அமைதிப் பேரணியொன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இந்தப் பேரணியை நேற்று வெள்ளிக்கிழமை(05) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் – அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான
வீதியூடாகச் சென்று, மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.
அமைதிப் பேரணி
அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும்
எழுப்பியிருந்தனர்.
இந்த பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
