Home இலங்கை சமூகம் கிளிநொச்சி – தருமபுரம் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை : மக்கள் விடுத்த கோரிக்கை

கிளிநொச்சி – தருமபுரம் வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை : மக்கள் விடுத்த கோரிக்கை

0

கிளிநொச்சி (Kilinochchi) – தருமபுரம் வைத்தியசாலையை பயன்படுத்தும் பொது மக்கள் அவ் வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிடங்கள் வசதிகள் காணப்பட்ட போதிலும் மக்களுக்கான சிகிச்சை முழுமையாக பெற முடியாத நிலையில் உள்ளதாக நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் வைத்தியசாலையில் இருபத்தியொரு கிராமங்களுக்கு அதிகமான மக்கள் தமது வைத்திய சேவையினை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் குறித்த வைத்தியசாலையில் ஒரே ஒரு வைத்தியரே நாளாந்தம் சிகிச்சை வழங்கி வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இருக்கின்ற ஒரு வைத்தியரே நாளாந்தம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், கிளினிக் நோயாளர்கள் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் அனைவருக்கும் சிகிச்சை வழங்குகின்றார்.

மேலும், ஒரு குருதி பரிசோதனை செய்வதாயின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தருமபுர வைத்தியசாலையை தரம் உயர்த்தி சிறந்த சிகிச்சை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

https://www.youtube.com/embed/vNYK3j0uJ18

NO COMMENTS

Exit mobile version