நீண்ட வரிசையில் செப்டெம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் வரி செலுத்த முன்வந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம்
அத்தோடு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் நிகழ்நிலை செயலியிலும் பலர் வரி செலுத்துவதற்கு உள்நுழைய முயல்வதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது பெரும் பலம் எனவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிகாட்டியுள்ளார்.
வரிப்பணம்
இந்த நிலையில், செப்டம்பர் 15 முதல் 30 வரை வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கவுன்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், “தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே இங்கு பிரச்சினை” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.