Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் திடீரென வேலையிழந்த இலட்சக்கணக்கானோர்

இலங்கையில் திடீரென வேலையிழந்த இலட்சக்கணக்கானோர்

0

நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறை காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதால் சுமார் 450,000 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.

நாட்டின் தேங்காய் உற்பத்தியில் கணிசமான பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் கீழ் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த எண்ணெய்க்கு வற் வரி விதிக்கப்படுவதில்லை.

எண்ணெய் உற்பத்தியாளர்கள் கவலை

இருந்த போதிலும், உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 15% வற் செலுத்த வேண்டியிருப்பது நியாயமற்றது என்று தொழில்துறையினர் கூறுகின்றனர்.

இது உள்ளுர் கைத்தொழில்களை நடத்துவோருக்கு இடையூறாகவும், அத்தொழிற்சாலைகள் முடங்குவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளதாக பாரம்பரிய உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version